Friday, November 9, 2018

Science Fact - பருக்கள் உடலின் பிற பகுதிகளில் வராமல், முகத்தில் மட்டுமே மிகுதியாக வருவது ஏன் ?

முகத்தின் தோற்பரப்பில் சிவந்த நிறத்தில் தோன்றும் மிகச் சிறு கட்டிகளை முகப்பரு என்கிறோம்.




இப்பருக்களுள் சீழ்த்துளிகளும் (pus) இருக்கும். பெரும்பாலும் 13 முதல் 20 வயதுவரை உள்ள இளைஞர்கட்கேமுகப்பரு மிகுதியாக வருகிறது. 

இதற்குப் பல காரணங்கள்உள. பருவ முதிற்சியினால் தோற்சுரப்பிகளில் எண்ணெய்ப்பிசுப்புடைய ஒருவகைக் லொழுப்புப் பொருள் மிகுதியாகச் சுரக்கிறது. இது தோற்பரப்பின் மிக நுண்ணிய துளைகள் வழியே வெளியேறும்போது தோலின் அடிப்புறமுள்ள திசுக்கள் (tissues) சிவந்து வீங்கி பருக்களாகக் காட்சியளிக்கின்றன.



பாக்டாரியா எனப்படும் நுண்ணுயிரிகளினால் விளையும் தொற்றல் (infection) காரணமாகவும் நமைச்சல் ஏற்பட்டு மேற்கூறிய பிசுபிசுப்பான கொழுப்பு எண்ணெய் சீழாக மாறி சிவந்து பருக்களாவதுண்டு. 

ஊட்டமான உணவு உட்கொள்ளமை, கவலைப்படுதல், நல்ல காற்றோட்டமில்லாத அசுத்தமான சூழலில் வசித்தல் ஆகிவையும் பருக்கள் தோன்றக் காரணம் எனலாம். உடற்பகுதியிலேயே முகம்தான் நுட்பமான உணர்ச்சிகளுக்கும், தூண்டல்களுக்கும் உட்படும் பகுதியாகும். 



எனவேதான் பருக்கள் அதிகமாக முகத்தில் தோன்றுகின்றன. பருக்கள் மேலும் பரவாமல் தடுக்க நல்ல நீரையும், சோப்பையும் பயன்படுத்தி அவ்வப்போது முகத்தைக் கழுவி தூய்மையான துண்டினால் துடைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News