Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 3, 2018

TNPSC GROUP-1 தேர்வில் அதிரடி மாற்றம்.!

தமிழகத்தில், அரசு பணிகளில் சேர, தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சாா்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்,



வணிக வரி உதவி ஆணையர் ஆகிய பணிகளில் செய்வதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும்

குரூப்-1 தேர்வில் தமிழக அரசு கடந்த நாட்களில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கான வயது வரம்பு 35-ல் இருந்து 37 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு 30-ல் இருந்து 32 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

Image result for GROUP 1



குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கால தாமதம் ஆகுவதால் தேர்வர்கள் புகார் எழுப்ப தொடங்கினர். தேர்வு எழுதி 1 வருடத்திற்கும் மேல் காத்திருக்கும் சூழ்நிலை இருக்கிறது எனவும், இந்த நேரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் டிஎன்பிஎஸ்சி மீது புகார் எழுந்தது.

இந்நிலையில், குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும், அறிவிக்கை வெளியிட்ட 2 மாதத்தில் முதல்நிலை தேர்வு, அடுத்த 2 மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.



Popular Feed

Recent Story

Featured News