Join THAMIZHKADAL WhatsApp Groups
குரூப் 2 போட்டித் தேர்வு தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்ப தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுவதாகவும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயிற்று மொழி தமிழில் இருந்தால் வினாத்தாள்களும் கண்டிப்பாக தமிழில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 11ஆம் தேதி நடைபெறும் தொகுதி-II முதனிலைத்தேர்வுக்கான கேள்வித்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வெளியாகும் ஆதாரமற்ற, தவறான தகவல்கள் குறித்து தேர்வர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது
No comments:
Post a Comment