Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 16, 2018

10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)

10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)






2. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண். 16 74/2017ன் 21.09.2017 அன்றைய
உத்தரவுப்படி, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு அறிக்கையை ஆராய்ந்து அமல்படுத்த அமைக்கப்பட்ட அலுவலர் குழு தனது அறிக்கையை வழங்கி, அதனைத் தொடர்ந்து நிதித்துறை அரசாணை எண். 303 நாள். 11.10.2017 வெளியிடப்பட்டது. மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி புதிய ஊதியம் 01.01.2016 முதல் கருத்தியலாகவும் 01.10.2017 முதல் பணப்பலனாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஊதிய முரண்பாடு மற்றும் அது சார்பான கோரிக்கைகள் சரி செய்ய அரசு நிதித்துறை அரசாணை எண். 57 நாள். 19.02.2018ன் படி ஒரு நபர் குழுவை அமைத்தது. ஊழியர்கள் 01.01.2016 முதல் பணப்பலன் வழங்கப்படவில்லை என்றும் அதற்கான கோரிக்கையினை திரு. சித்திக், இஆப, நிதித்துறை செயலர் (செலவினம்) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவில் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு நபர் குழுவால் மேற்குறிப்பிட்ட ஊழியர்களின் கோரிக்கையானது அரசாணை எண். 57 நாள். 19.02.2017ல் அது சார்பான வாசகம் குறிப்பிடாததால் கருத்தில் கொள்ளப்படவில்லை என அறிய வருகிறது.





3. அரசாணையில் உள்ள வார்த்தைகளை நன்கு முழுமையாக ஆராய்ந்தோம். அது சார்பான குறிப்புகள் உள்ள பகுதியை படித்தும் மத்திய அரசு 01.01.2016 முதல் பணப்பலன் வழங்கியதை கருத்தில் கொண்டும் குறிப்புகளின் படி ஊழியர்களின் 01.01.2016 முதல் பணப்பலன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம். ஆகவே அரசாணை எண். 57 நாள். 19.02.2017ன் படி அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு இந்த கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.

4. அரசு கூடுதல் வழக்கறிஞர் ஒரு நபர் குழுவின் கால அளவு 31.07.2017ல் நிறைவு பெற்று, தொடர்ந்து கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக 30.11.2018 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். குழு நாளது வரை தனது அறிக்கையினை சமர்ப்பிக்காததால், அரசு குழுவின் காலக்கெடுவை நீட்டிக்க பரிந்துரைக்கிறோம் மேலும் ஒரு நபர் குழு ஊழியர்களின் 01.01.2016 முதல் பணப்பலன் வேண்டும் கோரிக்கையினை பரிசீலனை செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

5. அரசு கூடுதல் வழக்கறிஞர், பழைய ஓய்வூதியமே தொடர வேண்டும் என்பதற்கான திரு. ஸ்ரீதர், இஆப, தலைமையிலான வல்லுநர் குழு அறிக்கையின் நகலினை பெற்று சீலிடப்பட்ட கவரில் இந்த வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்.





6. குழு குறிப்பின்படி நல்ல முடிவினை வழங்கி, அறிக்கையை அரசுக்கு 05.01.2019 அன்றோ அதற்கு முன்னரோ வழங்க வேண்டும். அறிக்கை நகலுடன் அரசின் நிலைப்பாட்டையும் சேர்த்து 7 ஜனவரி 2019 அன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

7வழக்கு 7 ஜனவரி 2019க்கு ஒத்திவைக்கப்படுகிறது.

8. எதிர்மனுதாரர் (3 முதல் 7 வரை) வழக்கறிஞர் முன்னதாக ஊழியர் சங்கங்கள் 11.12.2018 வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என உறுதி வழங்கியுள்ளார். இந்த வழக்கு 7 ஜனவரி 2019 வரை ஒத்தி வைக்கப்படுவதால், முந்தைய உறுதிமொழி தொடரும்.





(அன்பு நண்பர்களே நீதிமன்ற இடைக்கால ஆணையில் எந்த இடத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அல்லது மாநில அரசுக்கு இணையான ஊதியம் அல்லது ஊதிய முரண்பாடுகள் முதுகலை ஆசிரியர்கள் ஊதியம் குறித்து பேசியதாக எங்களுக்கு எதுவும் தெரியவில்லை உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கூறவும்.)

COURT ORDER  CLICK HERE TO DOWNLOAD PDF




No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News