கண் சிகிச்சை உதவியாளர் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தால், பரிந்துரை செய்யப்படும், என, கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள, 43 கண் சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தீர்மானித்துள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க, பிளஸ்2 தேர்ச்சியுடன், மாநில மருத்துவ கல்லுாரியில் நடத்தப்பட்ட 'ஆப்தால்மிக் அசிஸ்டென்ட்' பட்டய படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.எஸ்.சி.ஏ., - எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. ஓ.சி., பிரிவினருக்கு வயது வரம்பு, 30 ஆகும்.மேற்கண்ட தகுதிகளுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
ஆதரவற்ற விதவைகள், கலப்புமணம் செய்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அவர்களை சார்ந்தோர், பணியிலிருக்கும் ராணுவத்தினர் சார்ந்தோருக்கு முன்னுரிமை உண்டு. வரும், 10ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் பிற சான்றுகளுடன் வந்து பதிவு செய்தால், பணிக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு, மாவட்ட கலெக்டர் அறிவித்துள் ளார்.
No comments:
Post a Comment