Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 6, 2018

விண்ணில் ஏவப்பட்டது 'ஜி சாட்-11' செயற்கைக்கோள்: அதன் பயன்கள் என்ன தெரியுமா?

அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்ட ஜி சாட் - 11 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட ஜி சாட்-11 செயற்கை கோளை, 'இஸ்ரோ' வடிவமைத்தது.



இந்த செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2 மணி 7 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்த 30 நிமிடங்களில், ஜிசாட் செயற்கைகோள் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.



5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. GSAT-11 வெற்றிகரமாக இன்று காலை தென் அமெரிக்காவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு நிலை நிறுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது (சில நாட்கள் ஆகும் அவை முடிய )



தினமும் ஏதாவது வானத்தில் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்களே ! இவை என்ன ?? நமக்கு இதனால் என்ன பயன்கள்?

இன்று செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் யூடூப் மற்றும் வீடியோக்கள், விளையாட்டு கேம்ஸ்கள் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் .. இவற்றுக்கு தேவை "data"! குறுகிய நொடிப் பொழுதில் பெரிய அளவிலான டேடாவை கடத்த முடியும் என்கிற விஞ்ஞானம் இப்போது வளர்ந்திருக்கிறது!!

முன்னர், இவைகள் உங்கள் வீட்டுக்கு வரும் கரண்ட் கம்பி மாதிரி இணைப்புகள் மூலமே அதிக அளவில் சாத்திய பட்டு கொண்டு இருக்கிறது .. இந்திய போன்ற பறந்து விரிந்த நாட்டில் எல்லா ஊருக்கும் கம்பி இழுத்து இன்டர்நெட் இணைப்பு அமைக்க சாத்தியமில்லை .. அதற்காக உருவாக்கப்பட்ட சாட்டிலைட் இது .!

இந்தியாவில் எந்த ஒரு காடு மலை கடலில் இருக்கும் சிறு சிறு தீவுகளில் கூட இனி இன்டர்நெட் வசதி நாம் பெற முடியும் .. இதனுடைய வேகம் "16 GBPS" ..



இது கிராம பஞ்சாயத்துக்களை இணைக்கும் ஒரு பெரிய அகில இந்திய "bharathnet" என்கிற ஒரு அரசு நிர்வாக திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் .. இது மூன்றாவது செயற்கைக்கோள் .. இந்த வகை Data satellite களில் ..இதற்கு அடுத்து செலுத்தப்படும் செயற்கைக்கோள் சுமார் 100GBPS அளவில் இருக்கும் ..

மாலை நேரத்தில் ஆறுமணிக்கு திருச்சி லோக்கல் சாட்டிலைட் டிவி ஒளிபரப்பை கண்டு வியந்து ஆரம்பித்து இன்று பல ஆயிரம் டிவி சானெல்கள் . வருவதற்கு காரணமான INSAT வகை . போல இனி செல்போனில் அனைவருக்கும் நம்ப முடியாத படி வேகமும் .. தடை இல்லா இணைப்பும் கிடைக்கும் ..

நமது நாட்டில் விஞ்ஞானிகள் மட்டுமே நமக்கு அடுத்து வரும் ஆண்டுகளுக்கு என்ன தேவை என்று அறிந்து செயல்படுகிறார்கள் என நினைக்கிறேன் .. வாழ்த்துக்கள் ISRO !



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News