Saturday, December 8, 2018

தேர்வுத் தாள் கசிவு: ரத்தான கணித பாடத்துக்கு டிச.12 இல் மறுதேர்வு

தேர்வுத் தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட கணிதத் தாள்-2 அரியர் தேர்வு மீண்டும் வருகிற 12-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் டிசம்பர் 3-ஆம் தேதி கணிதத் தாள்-2 பாடத்துக்கான (எம்.ஏ. 6251) அரியர் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் அரியர் தேர்வில் 350 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.



இந்த நிலையில் தேர்வு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில், அந்தத் தேர்வின் வினாத்தாள் வெளியாகியிருப்பது குறித்து மாணவர் ஒருவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதை உறுதி செய்த பல்கலைக்கழக அதிகாரிகள் உடனடியாக, அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக, தேர்வு எழுதத் தயாராக வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.




இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட கணிதத் தாள்-2 பாடத்துக்கான அரியர் தேர்வுக்கான மறு தேதியை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, வருகிற 12-ஆம் தேதி இந்தத் தேர்வு மீண்டும் நடத்தப்பட உள்ளது.
மாணவர்கள் ஏற்கெனவே வைத்துள்ள தேர்வறை நுழைவுச் சீட்டு மூலம் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News