Thursday, December 13, 2018

வேலை நிறுத்த போராட்டம் குறித்து மாவட்ட வாரியாக 16ம் தேதி ஜாக்டோ-ஜியோ விளக்க கூட்டம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாவட்ட வாரியாக 16ம் தேதி விளக்க கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 





கடந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். 

மேலும், டிசம்பர் 4ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்க இருந்த நிலையில், மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் கமிட்டியின் பரிந்துரையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஜனவரி 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அதன் காரணமாக, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர். 





இந்நிலையில், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்தும், நீதிமன்ற வழக்கு தொடர்பாகவும் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மாவட்ட வாரியாக கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ முடிவு செய்துள்ளது. அதற்காக 20 ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தலா 2 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News