Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 17, 2018

வரலாற்றில் இன்று 17.12.2018

டிசம்பர் 17 கிரிகோரியன் ஆண்டின் 351 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 352 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 14 நாட்கள் உள்ளன.





நிகழ்வுகள்

942 – நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான்.
1398 – சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து டீமூர் படைகள் தோற்கடித்தன.
1577 – பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.
1718 – பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.
1819 – சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.
1834 – அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1903 – ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் ஊர்தியில் பறந்தனர்.
1926 – லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.





1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.
1947 – இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.
1961 – கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
1967 – ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் போர்ட் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
1970 – போலந்தில் கிதீனியா நகரில் தொடருந்துகளில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.
1973 – ரோம் நகர விமான நிலையத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.
1983 – லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
1986 – போதைப் பொருள் வர்த்தகத்துக்கெதிராகக் குரல் கொடுத்த கொலம்பியாவின் பத்திரிகையாளர் கில்லெர்மோ இசாசா சுட்டுக் கொல்லப்பட்டார்.
1989 – 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

பிறப்புக்கள்

1908 – வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் (இ. 1980)
1959 – ரஞ்சகுமார், ஈழத்தின் சிறுகதையாசிரியர்
1972 – ஜோன் ஆபிரகாம், இந்திய நடிகர்
1975 – சுசந்திகா ஜயசிங்க, இலங்கையின் ஓட்ட வீராங்கனை

இறப்புகள்

1947 – ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் நாட்டு வேதியியலாளர் (பி. 1879)
1967 – ஹரல்ட் ஹோல்ட், முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் (பி. 1908)
1975 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (பி. 1908)
1979 – சேர் ஒலிவர் குணதிலக்க, இலங்கையின் மகா தேசாதிபதி

சிறப்பு நாள்





பூட்டான் – தேசிய நாள் (1907)
ஐக்கிய அமெரிக்கா – றைட் சகோதரர்கள் நாள்
ஓய்வூதியர் தினம் (இந்தியா)
பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News