துபாயில் முன்னணி நிறுவனத்தில் வேலைக்கு செல்ல வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதுறை தலைவர் சுனில் பாலீவால் அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்து
துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனில் பாலீவால் வெளியிட்ட அறிவிப்பு:ஐக்கிய அரபு நாட்டிலுள்ள துபாயில் ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய டிப்ளமோ எலக்ட்டிரிக்கல், மெக்கானிக்கல் தேர்ச்சி பெற்று மூன்று வருட அனுபவம் அல்லது பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படித்து ஐ.டி.ஐ.(எலக்ட்டிரிக்கல், மெக்கானிக்கல்) தேர்ச்சியுடன் ஐந்து வருட பணி அனுபவமுள்ள பையர் பைட்டிங் டெக்னிசியன், பையர் அலாரம் டெக்னிக்கல்(மாத ஊதியம் ₹19,500- முதல் ₹29,000) மற்றும் டிசல் என்ஜின், எலக்ட்ரிக்கல் பம்ப் டெக்னிக்கல்(மாத ஊதியம் ₹29,000 முதல் ₹38,500) தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு திறமைக்கேற்றவாறு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணியிடங்களுக்கு 35 வயதிற்குட்பட்ட நபர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவச் சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் omcsfe2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment