Saturday, December 15, 2018

பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழக பள்ளி கல்வித்துறையில் கடந்த 2 வருடங்களாக பல அதிரடி மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது.





நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட பின் தமிழக பள்ளி கல்வி துறை பள்ளி பாட திட்டத்தில் புதிய முறைகளை மேற்கொண்டு வருகிறது.

10, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் இருந்த பொது தேர்வை 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வுகள் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 11, 12 ஆம் வகுப்புகளின் பொது தேர்வு மதிப்பெண் 1200 ல் இருந்து 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது.





அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் பள்ளி சீருடையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய வண்ண சீருடைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

வரும் ஜனவரி மாதம் முதல் தமிழக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்க உள்ளது.

இந்நிலையில், தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''வரும் நிதியாண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு உண்டான பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாணவர்களுக்கு கூடுதல் படிப்பு சுமை, நாட்கள் போதவில்லை என பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News