Saturday, December 15, 2018

9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்க ளுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.





ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், அரசு தேர்வுகள் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத் தைத் திறந்து வைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:அரசு தேர்வுத் துறை சென் னையை தலைமையிடமாகக் கொண்டு, 7 மண்டல அலுவலகங் களில் செயல்பட்டு வந்தது.





தற்போது மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் நலனை கருத்தில் கொண்டு, 32 மாவட்டங் களில் உதவி இயக்குநர் தலை மையில் அரசுத்தேர்வுகள் உதவிஇயக்குநர் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலமாக தேர்வு தொடர்பான அனைத்து தகவல் களையும், அந்தந்த மாவட்டங் களிலேயே தெரிந்து கொள்ள முடியும்.மாணவர்களுக்கு வழங்கப் படுவது போலவே, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாணவர்களைப் போலவே, ஆசிரியர்களும் நாட்டுநடப்பு களையும், தொழில் நுட்பங் களைத் தெரிந்து கொள்ளவும் மடிக் கணினி உதவியாய் இருக் கும். ஜனவரி முதல் வாரத்தில் மாணவ, மாணவியர்களுக்கு க்யூ ஆர் பார்கோடு இணைக்கப் பட்டு, ஸ்மார்ட் கார்டு வழங்கப் படவுள்ளது.





இந்த அட்டையில் ஆதார் கார்டு விவரங்களும் இணைக்கப்படுவதால், மாணவ, மாணவியர் தங்களது சான்றிதழ் களை இந்தியாவில் எங்கிருந் தாலும் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணி அமர்த்தப்பட் டுள்ள ஆசிரியர்கள் ஒரு வாரம் வரை வராவிட்டால், அங்கு தற்காலிக ஆசிரியர் நியமிக்கப் படுவர். ஆதிதிராவிடர் நலத் துறைமற்றும் பிற்படுத்தப்பட் டோர் நலத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க பரிசீலனை நடந்து வருகிறது என்றார்.




No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News