Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 16, 2018

பள்ளி ஆய்வு குறித்து BEO க்கு தெரிவிக்கும் புதிய நடைமுறை வேண்டாம் - BRTE வலியுறுத்தல்

மதுரையில் பள்ளிகள் ஆய்வில் புதிய நடைமுறை வேண்டாம் என ஆசிரியர் பயிற்றுனர்கள் (பி.ஆர்.டி.இ.,) வலியுறுத்தினர்.





அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் கற்றல் கற்பித்தலை பி.ஆர் டி.இ.,க் கள் ஆய்வு செய்கின்றனர்.தேசிய அடைவு ஆய் வில் (நாஸ்) மாநிலத்தில் மதுரை 27வது இடத்தில் இருப்பதால் பி.ஆர்டி.இ., ஆய்வை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி அவர்கள் ஆய்வுக்கு சென்றவுடன் சென்ற நேரம், பள்ளியில் இருப்பது போன்ற போட்டோவை வாட்ஸ்ஆப்பில் மேற்பார்வையாளர் மற்றும் பி.இ.ஓ.,க்களுக்கு அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்சுபாஷினி உத்தரவிட்டார்.





பி.ஆர்.டி.இ.,க்கள் கூறுகையில், "நாஸ் தேர்வு தேர்ச்சி குறைய ஆசிரியர், பி.இ.ஓ.,க்களுக்கும் பொறுப்பு உள்ளது. ஆய்வு அறிக்கை மேற்பார்வையாளரிடம் அளிக்கிறோம். துறைக்கு தொடர்பில்லாத பி.இ.ஒ.,க்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை வேண்டாம்," என்றனர்.சி.இ.ஓ., கூறியதாவது:'நாஸ்'ல் முதல் ஐந்து இடத்திற்குள் மதுரை வர ஆசிரியர் ஒத்துழைப்பு அவசியம். பி.ஆர்.டி.இ.,கள் அனைத்து பள்ளிக்கும் செல்கின்றனர்.





இதனால் ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு வருவர். 1- 5ம் வகுப்பு வரை பி.இ.ஓ.,க்களுடன் தொடர்பு ஏற்படுத்த அவர்களிடம் ஆய்வு விவரம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. குறைகள் குறித்து பி.ஆர்.டி.இ., நேரில் தெரிவிக்கலாம். உரிய மாற்றம் செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News