Friday, December 14, 2018

தொடக்கக்கல்வி இயக்குனரகம் அதிரடி - ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர் பட்டியலை தயாரித்து வழங்கும்படி தொடக்கக்கல்விஇயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.






தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் குறிப்பாக ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சரியாக வருவதில்லை என்றும், அதேபோல் நீண்ட நாள் விடுப்பு, கற்பித்தலில் திறமையின்ைம போன்ற பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அனுமதியின்றி நீண்ட நாட்களாக விடுமுறையில் இருக்கும், கற்பித்தலில் திறமையில்லாத ஆசிரியர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முன்தேதியிட்டு விடுப்பு அளித்தல், தொடர்ந்து பள்ளிக்கு தாமதமாக வருவது, தேதி குறிப்பிடாமல் விடுப்பு கடிதம் வழங்குதல் என ஒழுங்கீனங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது.






உரிய தரச்சான்று பெற்ற பின்னரே அரசு வழங்கும் நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் எமிஸ் பதிவுகள் மற்றும் மாணவர் எண்ணிக்கையை அவ்வப்போது ஒப்பிட்டு கண்காணிக்க வேண்டும். மாணவர் வருகை கல்வித்துறை ஆப்ஸில் மேற்கொள்ள தயாராக இருக்க பள்ளிகளை வலியுறுத்த வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.






No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News