Saturday, December 8, 2018

தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லை; உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

2017-ம் ஆண்டு 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கான அரசின் அறிவிப்பாணை முறையாக இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த எஸ்.மலர்விழி உள்பட 15 தேர்வில் முறைகேடு என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் பணி எழுத்து தேர்வில் வெற்றி பெற்றும் வேலையில் சேர்க்கவில்லை என்றும், தன்னை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் உடற்கல்வி ஆசிரியராக தேர்வாகியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.








தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்



தான் படித்த பி.பி.இ. படிப்பு, பி.பி.இ.எஸ். படிப்புக்கு இணை என்று அரசு விதி உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணையே முற்றிலும் முறையாக பின்பற்றப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News