தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வளர்த்தெடுக்க புதிய செயல் திட்டத்தை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தியிருக்கிறது.
தேசிய கலைத்திட்ட வடி வமைப்பு- 2005 கல்வியை தேர்வுச் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதன் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளை வகுப் பறையில் மட்டும் அடக்கிவிடாமல், அதன் வேறு பரிமாணங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
குழு மனப்பான்மை, எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன், சமுதாயத்திலிருந்து தனக்கு வேண்டியதை பெறும் திறன், அறிவியல் பூர்வமாக முடி வெடுக்கும் ஆற்றல், சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல், விசாரித்து அறிதல், பகுத்தாய்ந்து முடிவெடுத்தல், பிரச்சினைகளை அறிவு பூர்வ மாக அணுகுதல் போன்ற திறன்களை மாணவர்களிடையே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை இடைநிலை கல்வியில் பல்வேறு செயல் திட்டங்களை வடி வமைத்துள்ளது.
புதிய திட்டம் வடிவமைப்பு
தற்போது , வகுப்பறை பங்கேற்றலை உயர்த்துதல் (IMPART- Improving Participation) என்ற செயல் திட்டத்தை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்க ளிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் செயல்படுத்தியிருக்கிறது. சுற்றுப்புறம், மக்களின் வாழ்க்கை முறை, நில அமைப்புகள், இயற்கை வளங்கள், பண்பாட்டுச் சின்னங்கள், சமுதாய அமைப்பு கள், மொழி, கலாச்சாரம், வளங்க ளின் பயன்பாட்டு முறைகள் போன்றவற்றை மாணவ, மாணவி யர் கூர்ந்து ஆராய்ந்து அறியும் வண்ணம் கற்பித்தல் முறைகள் உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எம்.பில், பிஎச்டி போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் மாண வர்கள் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிப்பதுபோல், பள்ளிப் பரு வத்திலேயே மாணவர்களை ஆய்வுதளத்தில் ஈடுபடுத்தவும், அவர்களிடம் உள்ள திறமைகளை வளர்த்தெடுக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டத்தின் (RMSA) மூலம் கடந்த 2016-2017-ம் கல்வி யாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னோடி சிறப்பு செயல்திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து 2017-18-ம் கல்வியாண்டில் இத்திட்டம் கல்வியில் பின்தங்கிய நாகப்பட்டி னம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து நடப்பு கல்வியாண்டில் (2018-19) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல் திட்டம் (IMPART) நடை முறைப்படுத்தப்பட்டி ருக்கிறது.
செயல்வழி திட்ட கற்றல்
செயல் திட்ட வழி கற்றல் எனப்படும் (Project Based Learning) முறையை அடிப்படையாக கொண்ட இத்திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பள்ளிகளை தேர்வு செய்துள்ள னர். ஒவ்வொரு பள்ளிக்கும் 5 ஆய்வு கள் வீதம் 500 ஆய்வுகள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மேற்கொள்ளப்பட வுள்ளன. 9-ம் வகுப்பு மாணவர்கள் இந்த செயல்வழி திட்ட முறை கற்றலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆய்விலும் 4 மாணவர்கள் வீதம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். இதற்காக 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வழிகாட்டியாக செயல்படுவார்கள்.
மாணவ, மாணவியர் மேற்கொள்ளும் ஆய்வுக்குப்பின் வட்டார அளவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்டு, அவை மாவட்ட அளவில் சமர்ப்பிக்கப்படும். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கவும் திட்ட மிடப்பட்டிருக்கிறது.
இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்கும்
மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் த.தனசிங் கூறியதாவது:
இத்திட்டம் தொடர்பாக இதுவரை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் 100 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் செயல் திட்டங்களை எவ்வாறு வடிவமைப்பது?, மாணவர் குழுக்களை எவ்வாறு தேர்வு செய்வது?, செயல் திட்டத்தின் படிநிலைகள், செயல் திட்டத்தை செயல்படுத்துதல், தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தீர்வை செயல்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த வாரத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 ஆசிரியர்கள் வீதம் 400 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து மாணவர் குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து தரப்பு மாணவர்களையும் கற்றல் நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்து, பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்க இச்செயல் திட்டம் நிச்சயம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்றார்.
- அ.அருள்தாசன்
குழு மனப்பான்மை, எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன், சமுதாயத்திலிருந்து தனக்கு வேண்டியதை பெறும் திறன், அறிவியல் பூர்வமாக முடி வெடுக்கும் ஆற்றல், சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல், விசாரித்து அறிதல், பகுத்தாய்ந்து முடிவெடுத்தல், பிரச்சினைகளை அறிவு பூர்வ மாக அணுகுதல் போன்ற திறன்களை மாணவர்களிடையே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை இடைநிலை கல்வியில் பல்வேறு செயல் திட்டங்களை வடி வமைத்துள்ளது.
தற்போது , வகுப்பறை பங்கேற்றலை உயர்த்துதல் (IMPART- Improving Participation) என்ற செயல் திட்டத்தை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்க ளிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் செயல்படுத்தியிருக்கிறது. சுற்றுப்புறம், மக்களின் வாழ்க்கை முறை, நில அமைப்புகள், இயற்கை வளங்கள், பண்பாட்டுச் சின்னங்கள், சமுதாய அமைப்பு கள், மொழி, கலாச்சாரம், வளங்க ளின் பயன்பாட்டு முறைகள் போன்றவற்றை மாணவ, மாணவி யர் கூர்ந்து ஆராய்ந்து அறியும் வண்ணம் கற்பித்தல் முறைகள் உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எம்.பில், பிஎச்டி போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் மாண வர்கள் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிப்பதுபோல், பள்ளிப் பரு வத்திலேயே மாணவர்களை ஆய்வுதளத்தில் ஈடுபடுத்தவும், அவர்களிடம் உள்ள திறமைகளை வளர்த்தெடுக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டத்தின் (RMSA) மூலம் கடந்த 2016-2017-ம் கல்வி யாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னோடி சிறப்பு செயல்திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து 2017-18-ம் கல்வியாண்டில் இத்திட்டம் கல்வியில் பின்தங்கிய நாகப்பட்டி னம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து நடப்பு கல்வியாண்டில் (2018-19) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல் திட்டம் (IMPART) நடை முறைப்படுத்தப்பட்டி ருக்கிறது.
செயல்வழி திட்ட கற்றல்
மாணவ, மாணவியர் மேற்கொள்ளும் ஆய்வுக்குப்பின் வட்டார அளவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்டு, அவை மாவட்ட அளவில் சமர்ப்பிக்கப்படும். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கவும் திட்ட மிடப்பட்டிருக்கிறது.
மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் த.தனசிங் கூறியதாவது:
இத்திட்டம் தொடர்பாக இதுவரை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் 100 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் செயல் திட்டங்களை எவ்வாறு வடிவமைப்பது?, மாணவர் குழுக்களை எவ்வாறு தேர்வு செய்வது?, செயல் திட்டத்தின் படிநிலைகள், செயல் திட்டத்தை செயல்படுத்துதல், தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தீர்வை செயல்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
No comments:
Post a Comment