தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களிடம் பத்தாம் வகுப்பு முதல், பிஎச்.டி. வரையிலான அனைத்து அசல் சான்றிதழ்களையும் அவர்கள் வேலைக்குச் சேரும்போதே வாங்கி வைத்துக் கொள்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது
இவ்வாறு பணியில் சேர்ந்த பேராசிரியர்கள், அந்தக் கல்லூரியிலிருந்து விலகும்போது அவர்களுடைய சான்றிதழ்களை நிர்வாகம் தர மறுப்பதும், குறிப்பிட்ட தொகையைச் செலுத்த கட்டாயப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் பல முறை புகார்கள் வந்தபோதும், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரத்திலும் அண்ணா பல்கலைக்கழகம் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இவ்வாறு அசல் சான்றிதழை தர மறுக்கும் கல்லூரிகளின் இணைப்பு அந்தஸ்தை பல்கலைக்கழகம் ரத்து செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.
தங்களுடைய அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் தர மறுப்பதாக ஏராளமான பேராசிரியர்களிடமிருந்து பல்கலைக்கழகத்துக்கு புகார்கள் வருகின்றன. எனவே, கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின்னர் அவர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் உடனடியாக திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதை கல்லூரி தலைவரும், முதல்வரும் உறுதிப்படுத்தவேண்டும்.
மேலும், இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளும் தவறாமல் வரும் 17-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் இந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment