Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 18, 2018

பாதுகாப்பற்ற பள்ளி பட்டியலுக்கு உத்தரவு








தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பாதுகாப்பற்ற கட்டடங்களின் எண்ணிக்கை குறித்து, தகவல் சேகரித்து அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், 36 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி கட்டடங்களை, பொதுப்பணி மற்றும் வட்டார வளர்ச்சி துறையினர் பராமரிக்கின்றனர். 





மழைக்காலம் துவங்கும் போதெல்லாம், 'பாதுகாப்பற்ற கட்டடங்களில், மாணவர்களை தங்க வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்படுகிறது.போதிய இடவசதி இல்லாததால், பல பள்ளிகள், இதை பின்பற்ற இயலாத நிலை தொடர்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுக்க, பாதுகாப்பற்ற தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பட்டியலை அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை இயக்குனர் கருப்பசாமியிடம் கேட்ட போது, ''பாதுகாப்பற்ற கட்டடங்களை கணக்கெடுத்து, அப்பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். பட்டியல் திரட்டும் பணிகள் நடக்கின்றன,'' என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News