Wednesday, December 12, 2018

மரத்தைத் துண்டாக்குவதற்குக் கூர்மையான கத்தி ஏன் பயன்படுவதில்லை ? அரத்தை மட்டுமே பயன்படுத்துவது ஏன் ?

கூர்மையான கத்தியைக் கொண்டு மரத்தின் மெல்லிய தோற்பகுதியை வேண்டுமானால் சீவி எடுக்க முடியுமே தவிர, அதனைத் துண்டாக்க வெட்ட முடியாது.



இதற்குக் காரணம் மரத்தின் இழைகள் மிகவும் கடினமானவை. ஆனால் அரமானது உராய்வதற்கும், தேய்ப்பதற்கும் உரிய வகையில்செய்யப்பட்டிருப்பதால், வலிமை மிக்க மர இழைகளை அறுத்து மரத்தைத் துண்டாக்க இயலுகிறது. அரத்தின் பற்கள் ஒன்று இடப்புறம் சாய்ந்தும் மற்றொன்று வலப்புறம் சாய்ந்தும் மாறி மாறி அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.



இதனால் அரத்தை முன்னும் பின்னும் இழுத்து அறுக்கும்போது அறுபடும் இடத்தில் மரம் சிறு சிறு துணுக்குகளாகச் சிதைக்கப்பெற்று மரத்தூள் விழுவதைக் காணலாம். அரத்தின் தகடு இவ்வாறு வெட்டும் இடத்தில் உண்டாகும் கால்வாய்ப்பகுதி, தகட்டைவிட அகலமாக இருப்பதால் அரம் முன்னும் பின்னும்எளிதாகப் போய் வருவதற்கு வசதியாக இருக்கிறது. இம்முறையில் அரத்தைக்கொண்டு மரம் இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News