Tuesday, December 4, 2018

அறிவோம் அறிவியல் -வீட்டில் ஆமை புகுந்தால் கெட்ட சகுனமா?


‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று சொல்வார்கள்.



இந்தக் காலத்தைப்போல் அந்தக் காலத்தில் வீடுகளை எப்போதும் பூட்டி வைத்திருக்க மாட்டார்கள். 

மெதுவாக நடந்து செல்லும் ஆமை வீட்டுக்குள் நுழைவதுகூடத் தெரியாமல் இருந்தால், அந்த வீட்டில் அந்நியர்கள்கூட நுழைந்துவிடலாம் அல்லவா! அதனால் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்லியிருக்கலாம். மற்றபடி ஆமைக்கும் கெட்ட சகுனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 




ஆமை ஒரு சாதுவான பிராணி. தற்போது பலரும் வீட்டில் செல்லப் பிராணியாகவும் வளர்த்துவருகிறார்கள். ஆமைகள் சுமார் 150 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடியவை என்பதால் சீனர்களும் அமெரிக்கப் பூர்வகுடி மக்களும் ஆமையை ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடையாளமாக நினைக்கிறார்கள்



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News