Monday, December 3, 2018

இனி தமிழக அரசு பள்ளிகளில்., இட்லி, பூரி, பொங்கல்., களத்தில் இறங்கியது தமிழக அரசு.!!

தமிழக அரசு பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ் அய்யா அவர்களால் கொண்டுவரப்பட்ட மதிய உணவு திட்டத்தை, பின் மறைந்த முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தி, ஏழை மாணவர்களின் பசியை போக்கி, கல்வியை போதித்தனர்.





இந்த திட்டம் இன்றுவரை மென்மேலும் பல நல்ல மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி கொடுப்பதற்கு தமிழக அரசு செயல்படுத்தப்படவுள்ளதாக, தமிழக அமைச்சர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.



கடந்த வெள்ளிக்கிழமை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் எம்.மணிகண்டன், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினி, சீருடைகள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக'' தெரிவித்தார்.



மேலும், தற்போது சிறப்பாக மசெயல்பட்டு வரும் சத்துணவு திட்டத்தோடு, கூடிய விரைவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News