Wednesday, December 12, 2018

இருளில் தவித்த புதுக்கோட்டை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்காக சோலார் விளக்கு வாங்கிக்கொடுத்த சேலம் ஆசிரியை!-நெகிழ்ச்சி சம்பவம்!!

கஜா புயலால், மின்சாரம் இன்றி மாணவர்கள் படிக்க சிரமப்படுவதை அறிந்த, சேலம் ஆசிரியை மோனிகா, மேற்பனைக்காடு கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளி படிக்கும் 10 மாணவர்களுக்கு சோலார் மின் விளக்குகளை வாங்கிக் கொடுத்து அவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.



தற்போது, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தொடங்கி உள்ளதால், மின்சாரம் இன்றி, படிக்க முடியாமல், மெழுகுவத்தி வெளிச்சத்தில் மட்டுமே படித்து வருகின்றனர். இந்தத் தகவலை கல்வியாளர்கள் சங்கம் மூலம் அறிந்த சேலத்தைச் சேர்ந்த ஆசிரியை மோனிகா, முதல்கட்டமாக, கிருஷ்ணகிரியில் இருந்து 10 சோலார் மின் விளக்குகளை வாங்கி மின்சாரம் இன்றி சிரமப்படும் மாணவர்களுக்கு வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட மாணவர்கள் அவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.



வெளியூரிலிருந்து ஆசிரியை ஒருவர் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு சோலார் விளக்குகள் வாங்கிக் கொடுத்துள்ளதை அறிந்த அந்தப் பகுதி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிலர் மின்சாரம் இன்றி படிப்பதற்கு சிரமப்படும் மாணவர்களுக்குத் தங்கள் செலவில் சோலார் மின் விளக்குகள் வாங்கிக் கொடுக்க முன்வந்துள்ளனர்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News