Sunday, December 9, 2018

பருவநிலை மாற்றம்: கடமையை மறுக்கும் நாடுகள் - நடப்பது என்ன?

கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் மற்றும் சூழலியல்
செயற்பாட்டாளர் என பன்முக திறமை கொண்டவர் கனடா நாட்டை சேர்ந்த மார்கரெட் அட்வுட்.'தி மொமண்ட்' எனும் அவருடைய கவிதை மனித குலத்திற்கும், சூழலியலுக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக மூன்று பத்திகளில் விவரிக்கும் .



'மனிதன் ஒன்றுமே இல்லை'


'எல்லாவற்றையும் வென்றுவிட்டதாக, எல்லாவற்றையும் சொந்தமாக்கி கொண்டதாக மனிதன் கருதுகிறான். ஆனால், இயற்கைக்கு முன்னால் மனிதன் ஒன்றும் இல்லை' என்ற பொருளில் அந்த கவிதை செல்லும்.

இந்த கவிதையை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்.
உயரும் புவி வெப்பநிலை

தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்ததைவிட புவியின் சராசரி வெப்பநிலை தற்போது சுமார் 1 டிகிரி கூடுதலாக இருக்கிறது என்கிறது உலக வானிலை ஆய்வு நிறுவனம்.

ஒரு டிகிரி என்பது குறைவு அல்ல. மனிதர்களுக்கும், புவியில் வாழும் உயிர்களுக்கும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, உயர்ந்து வரும் வெப்பநிலையின் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரிக்கும், அதன் காரணமாக பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

அது கடல் நீர்மட்டம் அதிகரித்தல், பெருங்கடலில் வெப்பநிலை மாற்றம் மேலும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றை பயிரிடுவதில் சிக்கல் ஆகியவையாக இருக்கக்கூடும்.

2018ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் உலகின் சராசரி வெப்பநிலை 0.98C ஆகும். அதாவது இந்த சராசரி அளவு 1850-1900 ஆண்டுகளில் நிலவிய வெப்பநிலையை விட அதிகம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.



https://www.youtube.com/watch?v=gF2L3oqeV1I&feature=youtu.be





உலகில் அதிக வெப்பநிலை நிலவிய 20 ஆண்டுகள், கடந்த 22 ஆண்டுகளில்தான் பதிவானதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

இதே நிலை தொடர்ந்தால், வரும் 2100ஆம் ஆண்டுவாக்கில் உலகின் வெப்பநிலையில் சுமார் 3-5C அதிகரிக்கும்.

பசுமை இல்ல வாயு

அமெரிக்கா, சீனா , இந்தியா ஆகிய நாடுகளே உலகளவில் பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றி வருகின்றன.

இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து உலகின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றலில் 40 சதவீதத்திற்கு காரணமாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், பாரீஸ் பருவநிலை உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

அந்த சமயத்தில் அமெரிக்க தொழில்களையும், வேலையாட்களையும் பாதிக்காத புதியதொரு ஒப்பந்தத்தை உருவாக்க தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

தோல்வி

இப்படியான சூழலில் பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவான ஐபிசிசி, கடந்த அக்டோபர் மாதம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பூமியின் வெப்பநிலை தற்போதைய நிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமானால் ஏற்படுக்கூடிய விளைவுகளை அந்த அறிக்கை பட்டியலிட்டிருந்தது. அது உலகமெங்கும் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது.

பருவநிலைமாற்ற அச்சுறுத்தல்: விவாதத்துக்கு முட்டுக்கட்டை போட்ட உலக நாடுகள்
சர்வதேச அளவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த அறிக்கை குறித்து விவாதிப்பதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் முயற்சி எடுத்தனர்.

போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இந்த அறிக்கையை விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அமெரிக்கா, சௌதி அரேபியா, ரஷ்யா, குவைத் உள்ளிட்ட நாடுகள் இது குறித்து விவாதம் நடத்த முட்டுக்கட்டை போட்டுள்ளன.

'பொறுப்பு உள்ளது'

நாடுகள் அனைத்தும் இந்த ஆய்வறிக்கையை மையாக கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, அது குறித்த 'குறிப்பை' மட்டும் மாநாட்டில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளன.



உலகத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் வெப்பமயமாதல் குறித்த முக்கிய கூறுகளை விளக்கும் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால், இதுகுறித்து பேச்சுவார்த்தையை ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது விஞ்ஞானிகளும் கோபமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள்
"பருவநிலை மாற்றமே மனிதகுலத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல்" - டேவிட் அட்டன்பரோ
"இந்த ஆய்வறிக்கையை தயாரிப்பதற்கு முடிவு செய்ததே நாம்தான் என்பதால் இதை வரவேற்கும் பொறுப்பும் நம்மிடம்தான் உள்ளது," என்று கரீபியத் தீவு நாடுகளில் ஒன்றான செயின்ட் கிட்ஸ் - நெவிஸின் பிரதிநிதியான ருவன் ஹய்ன்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நம் கடமை

இந்த சூழலில் புவி வெப்பமயமாதலை தவிர்ப்பதில் தனி மனிதர்களுக்கும் பங்கிருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

"வாய்ப்பிருந்தால் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இது உடல்நலத்திற்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

இயன்றவரை மின்சாரத்தை பயன்படுத்துவதை குறையுங்கள். தேவையற்றபோது மின்விசிறியை பயன்படுத்தாமல் இருப்பது முதல் வாஷிங் மிஷன் பயன்படுத்துவது வரை மிக கவனமாக திட்டமிடுங்கள். இது உங்களுக்கு சாதாரணமான விஷயமாக தோன்றலாம். ஆனால், இந்த சிறு விஷயங்கள்தான் வியத்தகு விளைவுகளை தரும்." என்கிறார்கள்.



புவியின் எதிர்காலம் உங்கள் கையில் - இதனை செய்வீர்களா?
அது போல, மாமிசம் உண்பதை குறைத்துக் கொள்ளுங்கள். நம்புவதற்கு கடினமாகதான் இருக்கும், அதீத விவசாய உற்பத்தியும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

கறிகோழிகள் வளர்ப்பது, தண்ணீர் அதிகம் உறிஞ்சும் பணப்பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வது பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும். புவியை வெப்பமாக்கும்.

பாரீஸ் பருவநிலை மாற்ற சந்திப்பில், 119 நாடுகள் விவசாயத்தினால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுவை குறைப்பதாக உறுதி அளித்தன. அந்த நாடுகள் எவ்வாறு அதனை செய்யும் என்று நமக்கு தெரியாது. ஆனால், நாம் மனது வைத்தால் நிச்சயம் முடியும் என்கிறார்கள்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News