கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இது பற்றி அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா கூறுகையில், ''கர்நாடகாவில் இயங்கிவரும் அரசு முதல்நிலை மற்றும் டிகிரி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 100 சதவீதம் கட்டணமில்லாமல் இலவச கல்வி வழங்கப்படும்.
மாணவிகளுக்கான கட்டணத்தை அரசு முழுமையாக செலுத்தும், இத்திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்த அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்து வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தவும், அரசு பள்ளிகள் இல்லாத பகுதியில் மட்டுமே தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதிப்பது என்ற கொள்கை முடிவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது'' என்றார்.
No comments:
Post a Comment