Friday, December 14, 2018

கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும்.!அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.






இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தபின்னர் 413 மையங்களில் நீட்தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும்.






மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறனை வளர்க்க லண்டன் பேராசிரியர்கள் டிசம்பர் இறுதியில் வருகிறார்கள்.வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News