Monday, December 3, 2018

ஸ்டிரைக்' ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு, 'செக் (அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம்)

அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை, பதவி உயர்வு பட்டியலில் பின்னுக்கு தள்ள, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.



அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினரும், அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பினர், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம், அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.



பட்டியல்இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் விபரங்களை, போலீஸ் வாயிலாக பட்டியல் எடுக்க, அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுஉள்ளது. அதேபோல, அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் உட்பட, பள்ளிக்கு வராமல் போராட்டத்துக்கு செல்லும் ஆசிரியர்களை, ஒவ்வொரு நாளும் பட்டியல் எடுக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

இந்த பணிகளை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பட்டியலின் படி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை, கறுப்பு பட்டியலில் இடம் பெற செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. கறுப்பு பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வின் போது, பணி மூப்பு பட்டியலில் பிந்தைய இடத்துக்கு தள்ளவும், சங்கம் இன்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தரவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.



அபாயம்இந்த திட்டத்தால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும்; முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாகவும்; தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளாகவும் பதவி உயர்வு பெறுவது பாதிக்கப்படும்



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News