Monday, December 10, 2018

நான்கு மாதமாக சம்பளம் இல்லை : திண்டாடும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 200 பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்காததால் திண்டாடி வருகின்றனர்.



தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அந்த பள்ளிகளில் பதவி உயர்வு, நிர்வாகம் மாறுதல் அடிப்படையில் தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

பணி நிரவல் அடிப்படையில் 500 பட்டதாரி ஆசிரியர்கள் வரை பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.ஆசிரியர்களுக்கான ஊதிய வரைவு ஆணையை கருவூலத்திற்கு அரசு இன்னும் வழங்காததால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 




செலவுக்கு பணமின்றி ஆசிரியர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, என உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலர் முருகேசன் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News