Monday, December 3, 2018

நாளை தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் முடங்கும் அபாயம் !! மாணவர்கள் பாதிப்பு! கண்டுகொள்ளாத முதல்வர்!!



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடக்க உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.



ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும் . இந்த அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.



பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை மறுநாள் முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதிக்குள் முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News