Tuesday, December 11, 2018

அரசுப்பள்ளி மேன்மை அடைய அனைத்து வேலையில்லா கணினி ஆசிரியர்களும் சேவை மனப்பாண்மையுடன் பணியாற்றுங்கள்! !!!

770 அரசாணையை கணினி ஆசிரியர்களுக்கும், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மேல்நிலை இரண்டு ஆண்டு

அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசாணையை



உருவாக்கி தந்த மாண்புமிகு தமிழக அரசுக்கும் ,தமிழக கல்வி அமைச்சர் மற்றும் மதிப்புமிகு கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சாரந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மூன்று மாதம் என்ற குறுகிய காலம் என்று எண்ணாமல் முற்றிலும் சேவை நோக்கத் தோடு அரசுப்பள்ளியில் பணிபுரிய வேண்டகிறேன். அரசுப்பள்ளி நமது பள்ளி ஊதியத்தை எதிர் நோக்க வேண்டாம் அரசுப்பள்ளியில் பயிலும் நமது குழுந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர்களும் பணியற்ற வேண்டுகிறேன்.குறைந்த மாதம் என்றாலும் நல்ல பயிற்சியும் தங்கள் இடைவிடாத முயற்சியினாலும் அரசுப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய வேலையில்லா பட்டதாரிகள் உதவிட வேண்டமாய் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.



இந்த பணியிடங்களை வருகின்ற கல்வியாண்டிலே நிரந்தர பணியிடங்களாக மாற்றி கணினி ஆசிரியர்களுக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித்தர மாண்புமிகு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.



இப்படிக்கு ..
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News