Monday, December 3, 2018

போராட்டத்தை சமாளிக்க பகுதி நேர ஆசிரியர்கள்

'ஜாக்டோ - ஜியோ'வின் போராட்டத்தை சமாளிக்க, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை முழு நேரமும் வகுப்பு எடுக்க வைக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துஉள்ளது.



அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டமைப்பினர் ஆண்டுதோறும், தேர்வுகள் நடக்கும் நேரம், தேர்தலுக்கு முந்தைய காலம் மற்றும் புயல் போன்ற பாதிப்புகளால், நிவாரண பணிகள் நடக்கும் காலங்களில், போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். அந்த வகையில், நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்துள்ளனர். 



பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடக்க உள்ளதால், அதற்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. இந்த நேரத்தில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்வதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இதை சமாளிக்க, அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர கணினி ஆசிரியர்களை, முழு நேரமும் வகுப்புகள் எடுக்க வைக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

ஜாக்டோ - ஜியோவினர் அரசுக்கு நெருக்கடி அளிக்கும் காலங்களில், 10 ஆயிரத்துக்கும் மேல் உள்ள, பகுதி நேர ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தை நடத்தி, அரசுக்கு உறுதுணையாக இருந்து உள்ளனர். அந்த அடிப்படையில், தற்போதும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பட்டியலை எடுத்து, பள்ளிகளில் முழுநேர பணிக்கு வர, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News