அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், இலவச சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
முத்திரைஇந்த திட்டங்கள், தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவை கழகம் வாயிலாக, பள்ளிக் கல்வி துறையால் செயல்படுத்தப்படுகின்றன. ஆண்டு தோறும், இலவச நலதிட்டங்களுக்கு, 3,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.இதில், இலவச சைக்கிள் திட்டத்துக்கு மட்டும், 220 கோடி ரூபாய் தரப்படுகிறது. இந்த ஆண்டு பிளஸ், 1 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் பணி, தற்போது துவங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- - மாணவியருக்கு, இரண்டு நாட்களுக்கு முன், இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், அமைச்சர், சி.வி.சண்முகம் பங்கேற்று, ஒன்பது அரசு பள்ளிகளை சேர்ந்த, 1,524 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
இவற்றில், சில சைக்கிள்களின் முன்புற கூடையில், வட்ட வடிவில் சிறிய முத்திரை இருந்தது.அதில், கன்னட மொழியில் சில வாசகங்களும், மாணவி ஒருவர் புத்தகம் படிப்பது போன்றும் இருந்தது. தமிழக சைக்கிள்களில், கர்நாடகா முத்திரை வந்தது எப்படி என, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.கர்நாடகாவில், இலவச சைக்கிள் திட்டத்திற்கு வழங்கப்பட்ட, தரமற்ற சைக்கிள்களை, அம்மாநில அரசு நிராகரித்துள்ளது.விசாரணைஅந்த சைக்கிள்களை, தமிழக அரசின் திட்டத்தில் இணைத்து, வினியோகம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இப்பிரச்னை மாணவ - மாணவியர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த பிரச்னையை தொடர்ந்து, மாவட்ட வாரியாக அனுப்பப்பட்ட சைக்கிள்களில், கன்னட மொழி மற்றும் படம் உள்ள சைக்கிள்களை பிரித்தெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, சைக்கிள் வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகிகளிடம், இன்று விசாரணை நடத்தவும், தமிழ்நாடு பாடநுால் கழகம் முடிவு செய்துஉள்ளது
No comments:
Post a Comment