Saturday, December 8, 2018

மொபலை பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய முறை?

மொபைல் போன்களை பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் திட்டம் விரைவில் வரலாம் என்று கூறப்படுகிறது.





மோடி ஆட்சியில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் மற்றும் கார்ட் ( கிரடிட், டெபிட் ) பண பரிவர்த்தனைக்கு மாறிவிட்டார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஏடிஎம்களில் கார்டுகளைப் பயன்படுத்தினால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலைமை நம் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் உள்ளது.



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

இந்நிலையில் பிரபல வங்கிகள் கூடிய விரைவில் ஸ்மார்ட் போன் மூலம் பணம் எடுப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளன.



அதாவது ஏடிஎம்களில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
ஸ்மார்ட் போன் வாயிலாக ஏடிஎம்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் யூபிஐ செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

அதன்பின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தெரியும் கியூ ஆர்(QR) குறியீட்டினையூபிஐ மூலம் ஸ்கேன் செய்து அதற்கேற்ற பாதுகாப்பான பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகுவதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.




தற்போது முழு வீச்சில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.






ஸ்மார்ட்போன் மூலம் பணம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றால் அது பாதுகாப்பானதாகவும் மிக்க பயனுள்ளதாக அமையும் என்று வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News