Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 6, 2018

'அறிவியல் அறிவோம்' அடிக்கடி விரல்களில் நெட்டி முறிப்பது சரியா?

நெட்டி முறிப்பது சரியா ?



அடிக்கடி விரல்களில் நெட்டி முறிப்பது சரியல்ல. ஏனெனில் நம் விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே ‘சைனோவியல்’ (Synovial fluid) எனப்படும் உயவு திரவம் உள்ளது. நாம் நெட்டி முறிக்கும்போது, இந்தத் திரவம் வேகமாக ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர்கிறது. அப்போது, நெட்டி முறிக்கும் இடத்தில் வெற்றிடம் தோன்றி, ‘நைட்ரஸ் ஆக்ஸைடு’ உருவாகிறது. இதனால்தான் ‘சொடக்’ எனச் சத்தம் வருகிறது.

நெட்டி முறித்தால் என்ன ஆகும்?



சைனோவியல்தான் நம் விரல் இணைப்புகளில் உள்ள எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் ஒத்திசைவாகச் செயல்பட உயவு திரவமாகச் செயல்படுகிறது. அடிக்கடி நெட்டி முறிக்கும்போது இந்தத் திரவம் குறைகிறது. மேலும், கை விரல்களில் டென்டன், லிகமென்ட், கேப்ஸ்யூல் என மூன்று அமைப்புகள் உள்ளன. அடிக்கடி ஒருவர் நெட்டி முறிக்கும்போது இவை மூன்றும் வலுவிழந்து விரல்கள் பலவீனமடையக்கூடும்.

எப்படித் தடுக்கலாம்?

எப்போதாவது நெட்டி முறிப்பது தவறு இல்லை. ஆனால், அதையே தொடர் பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டாம்.
நெட்டி முறிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், கைகளுக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம்.
தொடர்ந்து டைப் செய்வது போன்று ஒரே மாதிரியான வேலையைக் கைகளுக்குக் கொடுக்க வேண்டாம். அவ்வப்போது இரண்டு நிமிடம் ஓய்வு எடுக்கலாம்.



எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் என்னென்ன ?

பொதுவாக, கால்சியம் நிறைந்த உணவுகளான பால், முட்டை, கேழ்வரகு, கீரைகள், எள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது நம் எலும்புகளை வலுவாக்கும். நீண்ட நேரம் வேலை செய்தாலும், சோர்வடையாமல் இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News