பொதுத்தேர்வு எழுத, வயது பற்றாக்குறை உள்ள மாணவர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில், தடை ஆணை பெற விண்ணப்பிக்கலாம்.
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 14 வயது கொண்டவர்களாக இருக்க வேண்டும். வயது குறைவாக உள்ள மாணவர்கள், தடை ஆணை பெற்றால் தான் தேர்வு எழுத முடியும். இதற்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, பெற்றோர் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
இத்தடை ஆணையை, மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம் என, இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அமுதவல்லி அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வு எழுதும் நாளில், 14 வயது கொண்டவர்கள், ஓரிரு மாதங்கள் குறைவாக உள்ளவர்கள், தடை ஆணை பெறலாம். இதற்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில், விண்ணப்பிக்க வேண்டும். தலைமையாசிரியர் இதுதொடர்பாக, பெற்றோருக்கு எடுத்துரைத்து, தேர்வுக்கு முன் தடை ஆணை பெற, அறிவுறுத்த வேண்டுமென, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment