வேளாண் முதுநிலைபாடங்களுக்கு, அடுத்த கல்வியாண்டு முதல் மீண்டும் இருபருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.வேளாண் உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்.,), வேளாண் பல்கலை, அதன் உறுப்பு கல்லுரிகள், பாடப்பிரிவுகள்குறித்து ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குகிறது.
வேளாண் பல்கலையில், கடந்த ஜூன் மாதம், தேசிய வேளாண் கல்வி அங்கீகாரக் குழு ஆய்வு நடத்தியது.இதில், வேளாண் பல்கலையின், ஒன்பது உறுப்பு கல்லுாரிகளில், ஏழு பாடப்பிரிவுக்களுக்கு, ஐ.சி.ஏ.ஆர்., அங்கீகாரம் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.ஆனால், ஐ.சி.ஏ.ஆர்., விதிகளை மீறி, முதுகலை மற்றும் முனைவர் பாடப்பிரிவுகளுக்கு, முப்பருவ கல்வி முறை பின்பற்றப்பட்டதால், அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

கடந்த, மூன்று ஆண்டுகளாக முதுகலை படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாத நிலை நீடிக்கிறது.இது குறித்து, பல்கலை துணைவேந்தர் குமார் கூறுகையில், ''வேளாண் பல்கலை மாணவர்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.ஏ.ஆர்.ஐ.,) மேற்படிப்பை தொடருவதற்கு, உதவியாக முதுநிலை படிப்புகளுக்கு, முப்பருவக் கல்வி முறை பின்பற்றப்பட்டது.
ஐ.சி.ஏ.ஆர்., விதிகளின்படி, இருபருவ கல்வி பின்பற்ற, நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இகுகுறித்து, ஜனவரியில் தேசிய வேளாண் அங்கீகாரக்குழு பல்கலையில் ஆய்வு செய்ய உள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல், முதுகலை படிப்புகளுக்கு மீண்டும் இருபருவக் கல்விமுறை பின்பற்றப்படும்,'' என்றார்.

No comments:
Post a Comment