Sunday, December 2, 2018

ஆசிரியர்கள் சம்பளம்: கவர்னர் திடீர் விளக்கம்

ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம், ஓய்வூதியம் வழங்க இயலாததற்கு, அரசு தான் காரணம் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:



நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, நிதி உதவி குறைக்கப்பட்டதற்கு கவர்னர்தான் காரணம் என்று முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அது உண்மையல்ல. பட்ஜெட்டில் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு போதுமான நிதியை அரசு ஒதுக்காததால் அப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம், ஓய்வூதியம் வழங்க இயலாத நிலை உள்ளது.



இதற்கு அரசு தான் காரணம். கவர்னர் மாளிகை காரணம் அல்ல.அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை வழங்க வேண்டிய நிதிக்கான கோப்பை புதுச்சேரிமுதல்வர் அலுவலகம், கவர்னர் மாளிகைக்கு கடந்த 17.8.2018ல் தான் அனுப்பியது. இதற்கு கவர்னர் மாளிகை பொறுப்பேற்க இயலாது.இந்த கோப்பு வந்த உடன் அதற்கு அதே நாளில் ஒப்புதல் அளித்துவிட்டு, ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் இனிமேல் காலதாமதம் செய்யக்கூடாது என்று அந்த கோப்பில் குறிப்பு எழுதி அனுப்பப்பட்டது.



நிதி உதவி பெறும் பள்ளிகளின்ஆசிரியர்களின் பணி பிரச்னைகள், மானியம் தொடர்பான கோப்புகளை ஒரு மாதத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று கவர்னர் மாளிகை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.ஆனால், ஓராண்டு காலதாமதத்துக்கு பின் கோப்புகளை அரசு அனுப்புகிறது. இதை மக்களுக்கு முதல்வர் நாராயணசாமி தெரியப்படுத்துவாரா?.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News