Tuesday, December 4, 2018

ஜாக்டோ ஜியோ - பகுதி நேர ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிப்பு

தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:.




கடந்த 2012ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு மாத ஊதியம் ₹7700 அரசு வழங்கி வருகிறது.

பகுதி நேர ஆசிரியர்களாகவே பணியாற்றி வரும் நாங்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான ஊதியம் இல்லாமல் முடங்கியுள்ளோம். அதனால் அரசை கண்டித்து பல முறை போராட்டங்கள் நடத்தியுள்ளோம். பணி நிரந்தரம் கேட்டும் கோரிக்கை வைத்துவிட்டோம்.கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுவிட்டோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ நடத்தும் வேலை நிறுத்தப் போராட்ட காலத்தில் பள்ளிக்கு சென்று வகுப்பு நடத்த இயலாது. எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு ஜாக்டோ-ஜியோவுடன் இணைந்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம், பங்கேற்று பள்ளிகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News