Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 6, 2018

விரைவில் உங்கள் ஆதார் தகவல்களைத் திரும்பப்பெறலாம், ஆனால் ஒரு கண்டிஷன்

ஒருவருக்கு விருப்பமில்லை என்றால் ஆதார் திட்டத்திலிருந்து தங்கள் தகவல்களைத் திரும்பப்பெற்று விலகும்படியான சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு. இதன்மூலம் ஏற்கெனவே ஆதார் பெற்றவர்கள் தங்கள் ஆதார் எண், பயோமெட்ரிக் மற்றும் பிற தகவல்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் ஒரு கண்டிஷன்!





கடந்த செப்டம்பர் மாதம் அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இருப்பினும் அதற்கு சில வரைமுறைகள் வகுக்கப்பட்டன. ஆதார் சட்டத்தில் தனியார் நிறுவனங்களை ஆதாரை வைத்து நபர்களை உறுதிசெய்ய அனுமதிக்கும் 57-வது பிரிவை தள்ளுபடி செய்திருந்தது உச்சநீதிமன்றம். மேலும் வங்கி மற்றும் சிம் கார்டுகளுடன் ஆதாரை இணைக்கச் சொல்வது சட்டவிரோதமானது என்றும் அறிவித்திருந்தது.





இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ஆதார் சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் முதல்கட்டமாக இனி ஒருவர் 18 வயதை எட்டும்போது ஆதாரிலிருந்து விலக வேண்டுமா, இல்லையா என்று முடிவெடுக்க 6 மாதங்கள் கொடுக்கப்படும் என்று UIDAI அமைப்பு அரசிடம் முன்மொழிந்தது. ஆனால் அமைச்சகம் இந்த வசதியை அனைவருக்கும் ஏற்படுத்தித் தருமாறு UIDAI-யிடம் பரிந்துரைத்துள்ளது.



எனவே, இப்போது UIDAI அமைப்பு முன்மொழியவிருக்கும் திட்டத்தின்படி எல்லாருக்கும் இந்த வசதி கொடுக்கப்படும். ஆனால் இந்த வசதியை PAN கார்டை இதுவரை பெறாதவர்களும் இனிமேலும் தேவையில்லை என்பவர்களும் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஏனெனில், உச்சநீதிமன்றம் PAN கார்டுடன் ஆதார் இணைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அறிவித்திருக்கிறது.





இதுவரை கிட்டத்தட்ட 36 கோடிக்கும் மேற்பட்ட தனிநபர் PAN கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 17 கோடி PAN கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News