Monday, December 10, 2018

'கஜா' பாதித்த கிராமங்களுக்காக மொய் விருந்து




தமிழகத்தில், 'கஜா' புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பில் இருந்து கிராமங்களையும், விவசாயிகளையும் மீட்பதற்காக, அமெரிக்காவின், வடக்கு கரோலினா பகுதியில், வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழு சார்பில், மொய் விருந்து நடைபெற்றது.



பாரம்பரிய உணவு மற்றும் தரமிக்க உணவு வகைகளை பரிமாறி, நடைபெற்ற மொய் விருந்து விழாவில், வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் தமிழர்கள், குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இந்த மொய் விருந்துக்கான ஏற்பாடுகளை, வாகை குழுவை சேர்ந்த, லாவண்யா ஜெனிபர், அனிதா, அருள்ஜோதி, திவ்யா, பிரேமலதா, நாகராணி, சத்யா, கலைச்செல்வி, கிருஷ்ணவேணி, தேவகி ஆகியோர் செய்தனர்.

தமிழகத்தில் இருந்தபடியே, வாகை குழுவின ரோடு சேர்ந்து பணியாற்றும் ஆசிரியரும், கல்வியாளர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பாளருமான, சதிஷ்குமார் கூறியதாவது: மொய் விருந்து விழாவில் பங்கேற்ற, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 5,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக அளித்தனர்.



இதன் மூலம், முதற்கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், எல்.என்.புரம், மாங்காடு, கொத்தமங்கலம், செரியலுார், வடகாடு உள்ளிட்ட கிராமப்பகுதிகளில், சூரிய ஒளியில் இயங்கும் தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News