Thursday, December 13, 2018

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு பள்ளிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும்," என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி அறிவுறுத்தினார்.மதுரையில் மாவட்ட, கிராம கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., சுபாஷினி தலைமை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் அமுதா, மீனாவதி, முத்தையா, கஸ்துாரி பங்கேற்றனர்.





இயக்குனர் தெரிவித்ததாவது.

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் அனுமதியின்றி நீண்ட நாட்களாக விடுமுறையில் இருக்கும், கற்பித்தலில் திறமையில்லாத ஆசிரியர் விவர பட்டியல் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்தேதியிட்டு விடுப்பு அளித்தல், தேதியின்றி விடுப்பு கடிதம் அளித்தல், தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது.





தரச்சான்று பெற்ற பின் நலத்திட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். உதவி பெறும் பள்ளிகளில் 'எமிஸ்' பதிவுகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை ஒப்பிட்டு கண்காணிக்க வேண்டும். மாணவர் வருகை கல்வித்துறை 'ஆப்'பில் மேற்கொள்ள தயாராக வேண்டும் என்றார்





No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News