Sunday, December 9, 2018

மாவட்டங்களில் செயல்பாட்டிற்கு வந்தது தேர்வுத்துறை

நீண்ட இழுபறிக்கு பின், மாவட்ட அளவில் தேர்வுத்துறை செயல்பட துவங்கியது.அரசுத் தேர்வுத்துறை 8, 10 ம் வகுப்புகள், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள், ஓவியம், கைத்தறி நெசவு உட்பட 22 வகையான தொழில்நுட்ப தேர்வு உட்பட 40 தேர்வுகளை நடத்துகிறது. தேர்வுத்துறைக்கு சென்னையில் இயக்குனர் அலுவலகம், மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டன.







340 நிரந்தர பணியாளர்கள் உட்பட 703 பேர் பணிபுரிந்தனர். இருந்தபோதிலும் தேர்வு தொடர்பான பிரச்னைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களே கவனிக்கும் நிலை இருந்தது.இதனால் தேர்வுத்துறையை சீரமைத்து 32 மாவட்டங்களிலும் அலுவலகங்களை ஏற்படுத்த செப்டம்பரில் அரசு உத்தரவிட்டது. 



மேலும் அந்த அலுவலகங்கள் உதவி இயக்குனர்கள் தலைமையில் 10 பணியாளர்களுடன் செயல்படும் என, அறிவிக்கப்பட்டது. தேர்வுத்துறை பணியாளர்களின் எதிர்ப்பு, புதிய பணியிடங்களை உருவாக்குதல் போன்ற காரணங்களால் மாவட்ட அளவில் அலுவலகங்களை ஏற்படுத்துவதில் இழுபறி நீடித்தது. தற்போது அந்தந்த மாவட்டங்களில் முதற் கட்டமாக அலுவலகங்கள் மட்டும் துவங்கப்பட்டன. விரைவில் தேர்வுத் தொடர்பான கோப்புகள் முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து தேர்வுத்துறைக்கு மாற்றப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News