Friday, December 14, 2018

போலி தகவல்களை தடுக்க யு.ஜி.சி., புதிய கட்டுப்பாடு

கல்லுாரிகள் போலியான விபரம் அளிப்பதை தவிர்க்க, பல்கலை மானிய குழு, புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.






பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்புகள், ஆராய்ச்சி துறைகள் போன்றவற்றுக்கு, மத்திய அரசின், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யில் இருந்து, ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கப்படும்.






இதற்கு, '12 பி' என்ற அங்கீகார அந்தஸ்தை பெற வேண்டும். இந்த அந்தஸ்தை பெறும் நிறுவனங்கள், தங்களின் அந்தஸ்தை புதுப்பிக்க, யு.ஜி.சி.,க்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தில், தங்கள் கல்லுாரி மற்றும் பல்கலையின் அடிப்படை கட்டமைப்பு, கல்வி தரம், பணியாளர், பேராசிரியர் விபரம், பல்கலையின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News