அரசு, தனியார் பள்ளிகள், ஆசிரியர் விபரங்கள், 'எமிஸ்' என்ற இணையதளத்தில் பதிவு செய்ய, கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி முகாம், தர்மபுரியில் நடந்தது. அரசு, தனியார் பள்ளிகள், கட்டடங்கள், பள்ளிக்கு சொந்தமான பொருட்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றை, www. emis. tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமுக்கு, அரூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) குழந்தைவேலு தலைமை வகித்தார். சி.இ.ஓ., ராமசாமி முகாமை துவக்கி வைத்தார்.
எஸ்.எஸ்.ஏ., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனப்பிரியா பயிற்சி அளித்தார். இதில், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிபட்டி, மொரப்பூர் யூனியன்களை சேர்ந்த கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என, 100 பேர் பங்கேற்றனர். இதில், பயிற்சி பெற்றவர்கள், நாளை மறுதினம் அனைத்து வட்டார வள மையங்களில், மேல்நிலை, மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment