Wednesday, December 12, 2018

JACTTO-GEO வழக்கு வதந்திகள்! உண்மை நிலவரம் உரைக்கும் - திண்டுக்கல்.எங்கெல்ஸ்

ஜாக்டோ-ஜியோ வழக்கின் நேற்றைய (10.12.2018) விசாரணையின் நடவடிக்கைகளை 21 மாத நிலுவையை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்களை பிளவுக்குட்படுத்தி மதிமயக்கும் செயலில் ஈடுபட்டு வரும் சில நபர்கள் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



இவர்களின் நோக்கம், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியமல்ல. மாறாக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான பிளவுகள் மட்டுமே.

 இறுதியாக நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பங்கெடுக்க விடாது தடுத்தோர், வேலைநிறுத்தத்தில் தங்களின் ஒற்றைக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதாக கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அளிக்க பரப்புரை செய்தோர் இன்று ஜாக்டோ-ஜியோவை விமர்சிப்பது வேடிக்கையே.

இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருப்பின் ஊதியம் & ஓய்வூதியக் கோரிக்கையையும் வலியுறுத்தியிருப்பர். அப்படி கூறியிருப்பின் பிளவுபடுத்த இயலாது ஓய்வூதியக் கோரிக்கையால் மற்றவர்களுடன் பொதுமைப்படுத்தப்பட்டுவிடுவோம் என்பதாலேயே ஓய்வுக்கால வாழ்வாதாரக் கோரிக்கைக்காக குரல் எழுப்பாது மீறி எழுப்பும் குரல்களையும் ஒழித்து வருகின்றனர்.

இவர்களின் இத்தகைய போக்கு ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடும் என்று கருதியும், இடைநிலை ஆசிரியர்களுக்குள் பரப்பப்பட்டுள்ள மிகத்தவறான பதிவுகளின் *உண்மை நிலையை உரைக்கும் நோக்கிலும், இடைநிலை ஆசிரியரும் CPS நீக்கம் குறித்த விழிப்புணர்வுப் பணிகளில் தொடர்ந்து களத்தில் நிற்பவருமான தோழர்.பிரடெரிக் எங்கல்ஸ்* சமூக வலைதளத்தில் பின்வரும் விளக்கத்தை அளித்துள்ளார்.



"நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைக் காணாமல் தனது கற்பனை திறத்தால் நினைத்ததைத் தயவுசெய்து பொதுக்கருத்தாக பகிர வேண்டாம்.

21 மாத நிலுவை தொகையை மட்டும் ஜாக்டோ ஜியோ வலியுறுத்தவில்லை.

சித்திக் குழுவின் காலத்தை காலநீட்டிப்பு செய்யவும் ஜாக்டோ ஜியோ கேட்கவில்லை.

20.12.2018 அடுத்த கட்ட விசாரணை என்றும் அதற்குள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்ட போது அதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்பிறகே வழக்கு விசாரணை 07.01.2019 மாற்றம் செய்யப்பட்டது.

ஊதிய குறைதீர் குழுவினர் தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தான் அதில் யாருக்கு என்ன செய்யப்பட்டது என்பது தெரியவரும்.



சித்திக் குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய குறையை மட்டும் தீர்க்க அமைக்கப்படவில்லை.

CPS குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும்முன் தமிழக முதலமைச்சர் சேலம் கூட்டத்தில் பேசிய கருத்தும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

CPS-ல் ஓய்வு பெற்ற, மரணம் அடைந்துள்ள 10,000 பேரின் நிலை குறித்தும் அரசிடம் கேட்கப்பட்டபோது, செட்டில்மென்ட் பற்றி மட்டும் குறிவிட்டு ஓய்வூதியம் குறித்த நமது வழக்கறிஞரின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்ததை அங்கிருந்தோர் அறிவர்.*

மேலும், நீதிபதிகள் தமது உத்தரவு வெளிவந்தால் கூடுதல் விபரங்களை அறியலாம். அதற்கு முன்பு தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். எனவே, போர்க்களங்கள் மாறலாம் போர்கள் மாறாது.

இதுகுறித்து, அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, *"சார், நேற்று நீதிமன்றத்தில் இது தான் நடந்தது. நானே நேரில் சென்றிருந்ததால் நடந்ததைக் கூறியுள்ளேன். இனி இதனை நம்புவதா அல்லது கட்டுக்கதைகளை நம்புவதா என்பதை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்."



மேலும், *"CPS வல்லுநர்குழு அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் நாளை நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்தாக வேண்டும் என்பதையும், தமிழத்தில் உள்ள 149 துறைகளுக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட One Man Commission report-ஐ 10 நாள் நீதிமன்ற விடுமுறை கழிந்து வரும் ஜனவரி 7-ற்குள் சமர்ப்பித்தாக வேண்டும் என்பதையும், 21 மாத ஊதிய நிலுவை குறித்த அறிவிப்பையும் ஜாக்டோ-ஜியோ-வின் வேலைநிறுத்த அறிவிப்பிற்குக் கிடைத்த முதல்கட்ட Positive Approach-ஆகவே பார்க்கிறேன்."

"அறிக்கைகளில் நமது கோரிக்கைகள் தீர்க்கப்படாது போனால் உறுதியான போராட்ட அறிவிப்பை ஜாக்டோ-ஜியோ அறிவிக்கும் எனவும் நம்புகிறேன்." என்று கூறினார்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News