Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 16, 2018

NMMS தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித் தொகைக்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.





அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப்படுவதற்காக நடத்தப்படும் என்.எம்.எம்.எஸ். தேர்வு தமிழகம் முழுவதும் 521 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்க 1 லட்சத்து 44,427 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 96 சதவீத மாணவர்கள் தேர்வெழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்.எம்.எம்.எஸ். தேர்வு காலை, முற்பகல் என இரு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக நடைபெற்ற மனத்திறன் தேர்வில் (ஙஅப) எண் தொடர்கள்,எழுத்து தொடர்கள்,ஆங்கில அகராதிப்படி எழுத்துகளை வரிசைப்படுத்துதல், தனித்த எண்ணை கண்டறிதல்,வெண் படங்கள் தொடர்பாக 90 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு மதிப்பெண்.





இதைத் தொடர்ந்து முற்பகலில் படிப்பறிவுத் தேர்வில் (நஅப) ஏழாம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும், 8-ஆ ம் வகுப்பு அறிவியல், கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் முதல் இரு பருவங்களிலிருந்தும் 90 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில் மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வெழுதினர். தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் கிடையாது.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், என்.எம்.எம்.எஸ். தேர்வில் கணிதம், ஆங்கிலப் பகுதியில் இடம்பெற்றிருந்த வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. பல வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கக் கூடிய வகையில் இடம்பெற்றிருந்தன.





இருப்பினும் சமூக அறிவியல், அறிவியல் போன்ற பகுதிகளில் இடம்பெற்றிருந்த கேள்விகள் ஏற்கெனவே படித்தவை என்பதால் ஓரளவுக்கு எளிதாக பதிலளிக்க முடிந்தது என்றனர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News