Tuesday, December 11, 2018

TET - முடித்தோரை அரசுப்பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் : அமைச்சர் செங்கோட்டையன்

''மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை நடத்துவது குறித்து, அறிக்கை விடும் அரசியல் கட்சி தலைவர்கள், ஆலோசனை தரலாம்,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.



அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தரமான கல்வி வழங்குவது, புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகளை நடத்துவது, பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சென்னையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுடன், ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.



பின், அவர் அளித்த பேட்டி:மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினோம். அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளோம்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News