Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, January 6, 2019

பிளஸ் 1ல் இடைநின்ற மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத கட்டுப்பாடு!!!

சென்னை:'பிளஸ் 1ல் இடைநின்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்கு, மாற்று சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
தமிழகத்தில், 2018 முதல், பிளஸ் 1க்கு பொது தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது.இந்த தேர்வில், தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2வில் பள்ளியிலேயே படிக்கலாம்.



இந்நிலையில், பிளஸ் 1ல், மதிப்பெண் குறைவாக பெற்றும், சில பாடங்களில் தேர்ச்சி அடை யாமலும் உள்ள, 28 ஆயிரம் பேர், பிளஸ் 1க்கு பின், பிளஸ் 2 படிக்கவில்லை.அவர்கள், பள்ளிகளில் மாற்று சான்றிதழ் பெற்று, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் உள்ளிட்ட வேறு படிப்புகளில் சேர்ந்துள்ளனர். பலர் எதுவும் படிக்காமல் உள்ளனர்.
எனவே, பள்ளியை விட்டு வெளியேறினாலும், அவர்களை பள்ளி மாணவர்களாகவே கருதி, தற்போது படிக்கும் மாணவர்களுடன் சேர்த்து, பிளஸ் 2 மற்றும், பிளஸ் 1, 'அரியர்' தேர்வு எழுத, சலுகை வழங்கப்பட்டு உள்ளது.சம்பந்தப்பட்ட மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே, தேர்வுக் கான பதிவு பணிகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



அதேநேரம், பிளஸ் 1 தேர்வு எழுதி, இடைநிறுத்தம் செய்த மாணவர்கள், பள்ளி கல்வி சாராத பாலிடெக்னிக் போன்ற, வேறு நிறுவனங்களில் படிக்கும் போது,பிளஸ் 2 தேர்வை எழுத முடியாது. ஒரே நேரத்தில், இரண்டு படிப்புகளை மேற்கொள்ள அனுமதி இல்லை.எனவே, இடைநிறுத்தம் செய்து, பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், தங்களின் பள்ளி மாற்று சான்றிதழை, படித்த பள்ளிகளில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.



மாற்று சான்றிதழ் இல்லாமல், தேர்வு எழுத அனுமதிக்க கூடாது என,  உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழிகாட்ட வேண்டும் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News