Tuesday, January 15, 2019

வரலாற்றில் இன்று 15.01.2019

ஜனவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 15 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 (நெட்டாண்டுகளில் 351) நாட்கள் உள்ளன. திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்.





நிகழ்வுகள்

69 – ரோமின் ஆட்சியை ஓத்தோ கைப்பற்றித் தன்னை மன்னனாக அறிவித்தான். எனினும் மூன்று மாதங்களில் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
1582 – லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை ரஷ்யா போலந்திடம் கையளித்தது.
1609 – உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.
1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: வெர்மொண்ட் விடுதலையை அறிவித்தது.
1799 – இலங்கையில் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
1892 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.
1908 – யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவை (ferry) ஆரம்பிக்கப்பட்டது.
1915 – மலாவியில் வெள்ளையினக் குடியேற்றத்தை எதிர்த்து யோன் சிலம்புவே தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியில் மூன்று வெள்ளையினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
1919 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1919 – ஜெர்மனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சம்பேர்க், மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
1936 – முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் தீவான குவாடல்கனாலில் இருந்து விரட்டப்பட்டனர்.
1943 – பென்டகன் திறக்கப்பட்டது.
1944 – ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1966 – நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவா என்பவாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
1969 – சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.
1970 – நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா சரணடைந்தது.
1970 – முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1975 – போர்த்துக்கல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.
1973 – வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
1977 – சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
2005 – ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.
2005 – செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2007 – சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

பிறப்புகள்

1622 – மொலியர், பிரெஞ்சு நாடகாசிரியர், நடிகர் (இ. 1673)
1866 – நேத்தன் சோடர்புளொம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1931)
1895 – ஆர்ட்டூரி வேர்ட்டானென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
1908 – எட்வர்ட் டெல்லர், ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர், ஹைட்ரஜன் குண்டின் தந்தை (இ. 2003)
1916 – இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 1998)
1923 – ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (இ. 1978)
1926 – காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
1929 – மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (இ. 1968)
1956 – மாயாவதி குமாரி, இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

1919 – ரோசா லக்சம்பேர்க், ஜெர்மனிய சோசலிசவாதி (பி. 1870)
1981 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)
1988 – ஷோன் மாக்பிரைட், நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் குடியரசு இராணுவத் தலைவர் (பி. 1904)
1998 – குல்சாரிலால் நந்தா, 2வது இந்தியப் பிரதமர், (பி. 1898)
2008 – கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938)

சிறப்பு நாள்

மலாவி – யோன் சிலம்புவே நாள்
விக்கிப்பீடியா நாள்

Popular Feed

Recent Story

Featured News