Tuesday, January 15, 2019

2018ல் வாய்ப்புகள் எப்படி?


2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில், தனியார் துறை வேலை வாய்ப்பு நியமனங்கள் 8 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக, நவ்க்ரி ஜாப்சீக் இண்டெக்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.





குறிப்பாக, ஆட்டோமொபைல் துறையில் 24 சதவீதமும், மனிதவள மேம்பாட்டு துறையில் 17 சதவீதமும், தகவல் தொழில்நுட்ப துறையில் 14 சதவீதமும், வளர்ச்சி பெற்றுள்ளது.
மாநகரங்களின் வரிசையில், பெங்களூருவில் 13 சதவீதம், டில்லியில் 10 சதவீத வேலை வாய்ப்பு நியமனங்கள் அதிகரித்துள்ளன. செனையில் 9 சதவீத வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அக்கவுண்டிங் துறை மட்டும் இங்கு 24 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
பணி வாய்ப்புகளை பொறுத்தவரையில், 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் 9 சதவீதமும், 8-12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் 7 சதவீதமும், 13-16 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் 5 சதவீதமும், 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர்கள் 2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News