Thursday, January 31, 2019

டிஎன்பிஎஸ்சி - டிச. 22-30ல் நடந்த தேர்வுக்கு பிப்.6க்குள் உத்தேச விடை மீது ஆட்சேபனைகளை அனுப்பலாம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:



தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2018 பிப்ரவரி 17ம் தேதி நடந்த மருந்தாய்வக இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கும், ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த சட்டத்துறை மொழிபெயர்ப்பாளர், டிசம்பர் 23ம் தேதி நடந்த கால்நடை பராமரிப்பு புள்ளியியல் ஆய்வாளர், டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற உதவி நூலகர் பணிகளுக்கு பிப்ரவரி 7ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.



அதே போல், 147 துறைத் தேர்வுகளை கடந்த டிசம்பர் 22, 30ல் எழுத்துத் தேர்வு முடிந்துள்ளது. இதற்கான அப்ஜெக்டிவ் டைப் தேர்வுகளின் உத்ததேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபம் இருப்பின் பிப். 6ம் தேதி மாலை 5.45 மணிக்குள் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்

Popular Feed

Recent Story

Featured News